திருச்செங்கோடு அறிமுகம்

உலகில் காலத்தால் பழமையானதாகவும், வரலாற்று சிறப்புடையதாகவும், இன்றளவும் மக்கள் வசிக்கக் கூடியதாகவும் உள்ள நகரங்கள் எண்ணிக்கை குறைவே. அத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கியதாகவும் மிகச்சிறந்த ஆன்மீகச் சிறப்பும் உள்ளதான நகரம் திருச்செங்கோடு ஆகும்.